ராஜீவகாந்தி கொலைவழக்கு நளினிக்கு பரோல் நீடிப்பு.

by Editor / 22-10-2022 11:43:19pm
ராஜீவகாந்தி கொலைவழக்கு நளினிக்கு பரோல் நீடிப்பு.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஏற்கனவே 9 முறை பரோல் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 10வது முறையும் பரவல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி இவருக்கு முதல் முறையாக பரோல் வழங்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் தொடர்ச்சியாக ஒன்பது முறை பரோல் நீட்டிக்கப்பட்டது. தற்போது, நளினியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் மேலும் ஒரு மாதத்திற்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Tags :

Share via