வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல்

by Staff / 25-02-2024 01:22:30pm
வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல்

தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.16,000 கோடி முதலீட்டில் வின்பாஸ்ட் நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். வியட்நாமின் வின்பாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலை அமைக்க கடந்த மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.16 ஆயிரம் கோடியில் தொடங்கப்படும் இந்த தொழிற்சாலையில் முதல்கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுகிறது.

 

Tags :

Share via