எல்.முருகன் அரசியலை விட்டு செல்ல தயாரா..? - மாணிக்கம் தாகூர் கேள்வி

by Staff / 25-02-2024 01:20:18pm
எல்.முருகன் அரசியலை விட்டு செல்ல தயாரா..? - மாணிக்கம் தாகூர் கேள்வி

40 தொகுதிகளை பாஜக கைப்பற்றாவிட்டால் மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசியலை விட்டு செல்வாரா? என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வியெழுப்பியுள்ளார். விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 40 தொகுதிகளையும் கைப்பற்றினால் நான் அரசியலை விட்டு செல்கிறேன். மத்தியில் இந்தியா கூட்டணி அரசு ஆட்சி அமைக்கும் போது தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நீட்டை பற்றிய அறிக்கை தெளிவாக இருக்கும் என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo