அப்துல் கலாம் 8 ஆம் ஆண்டு நினைவு நாள்: பொதுமக்கள் அஞ்சலி!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 2015 ஆம் ஆண்டு ஐ.ஐ.எம்.மில் காலமானார்.இவரது மறைவு நாட்டையே உலுக்கிய சம்பவமாகிப்போனது. இன்று அப்துல் கலாமின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்புவில் கலாம் தேசிய நினைவிடத்தில் இன்று காலை கலாம் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அங்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
Tags :