முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும் திமுகவில் மாற்றங்கள்-உதயநிதி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும் திமுகவில் மாற்றங்கள் செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் ஒழுங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக தமிழகமெங்கும் திமுக நிர்வாகிகள் பொதுஉறுப்பினர்கள் கூட்டங்களை நடத்த உத்தரவிட்டதையும் அந்தக்கூட்டங்கள் எந்தளவுக்கு உடல்வேகத்தை கட்சியினர் மத்தியில் ஏற்ப்டுத்தியுள்ளது என்பது குறித்தும் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் பற்றி ஆலோசனை நடத்திய நிலையில், முதல்வர் தாயகம் திரும்பியதும் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை திமுக ஒருங்கிணைப்புக்குழு வழங்கும் என உதயநிதி தெரிவித்துள்ளார்.இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். கட்சியில் செய்யாக்குடிய மாற்றங்கள் என்பது பொறுப்பாளர்கள் மாற்றமா..?இல்லை தேர்தல்பணிக்குழுவில் மாற்றமா...? என்ற குழப்பத்தில்உள்ளனர்.
Tags : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும் திமுகவில் மாற்றங்கள்