நடிகர் விஜய்யின் கட்சி அங்கீகாரம் தமிழக பாஜகவின் வளர்ச்சியை ஒருபோதும் பாதிக்காது - எச்.ராஜா பேச்சு.

by Editor / 08-09-2024 07:08:23pm
நடிகர் விஜய்யின் கட்சி அங்கீகாரம் தமிழக பாஜகவின் வளர்ச்சியை ஒருபோதும் பாதிக்காது - எச்.ராஜா பேச்சு.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகரப் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 36 விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக தற்போது விநாயகர் சிலைகள் ஊர்வலமாக தொடங்கி நடைபெற்றது.

இந்த நிகழ்வை தொடங்கி வைப்பதற்காக தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா வருகை தந்து, கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

 முன்னதாக, பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்த நிலையில், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, அவர் பேசியதாவது ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டது உள்நோக்கம் கொண்டது எனவும், அவர் திருக்குறளை சுட்டிக்காட்டி ஒழுக்கம் பற்றி பேசியதால் தான், ஒழுக்கமற்ற திமுகவினர் ஆவேசம் அடைந்து அவரை தீவிரவாதி போல் கைது செய்துள்ளனர்.

பிரதமரை கொன்று விடுவேன் என்று பேசிய அமைச்சர் தா.மு.அன்பரசனை கைது செய்யாத திமுக அரசு ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்த பேச்சாளரை கைது செய்வதை ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

 ஆகவே, தமிழக அரசு அவர் மீதான வழக்கை திரும்ப பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் என பேசினார்.மேலும், மகாவிஷ்ணு குறிப்பிட்ட சிலரை காயப்படுத்தும் வகையில், எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும் அப்படி தெரிவித்திருந்தால் அதற்கு தான் கூட வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் பாஜகவின் வளர்ச்சி ஒருபோதும் பாதிக்காது எனவும், திராவிட கொள்கைகளை உடைய தமிழக வெற்றிக்கழகம் அதே திராவிட கொள்கைகளை உடைய சக கட்சிகளின் வளர்ச்சி தான் பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Tags : நடிகர் விஜய்யின் கட்சி அங்கீகாரம் தமிழக பாஜகவின் வளர்ச்சியை ஒருபோதும் பாதிக்காது - எச்.ராஜா பேச்சு.

Share via