தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் 50, 500 பேர் பங்கேற்க உள்ளனர்.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் விக்ரவாண்டி நடைபெற உள்ள நிலையில் காவல்துறை சார்பாக 33 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது வரும் 23ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் 50, 500 பேர் பங்கேற்க உள்ளதாகவும் 250 வேன், 200 பஸ், ஆயிரம் இருசக்கர வாகனம் என வந்து செல்லக்கூடிய வாகனங்களுக்கு 16 வழிகளில் வழி ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் தமிழகவெற்றி கழகம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் பொது போக்குவரத்திற்கு எந்த விதமான தடங்களும் இன்றி மாநாடு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சொல்லி இருப்பதாகவும் தகவல்.மாநாடு நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில்மாநாடு அனுமதி வாங்கிய கையோடு கட்சிக்கான அங்கீகாரத்தையும் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கடலூர்பாடாலீஸ்வரா் கோவிலில் வழிபாடு நிகழ்த்தினார்.
Tags :