திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்த அரசு பேருந்து ஓட்டுனர் - 10 கிலோமீட்டர் தூரம் பேருந்தை இயக்கி உயிரை காப்பாற்றிய வீரப் பெண்.

by Writer / 16-01-2022 10:37:51am
திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்த அரசு பேருந்து ஓட்டுனர் - 10 கிலோமீட்டர் தூரம் பேருந்தை இயக்கி உயிரை காப்பாற்றிய வீரப் பெண்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து பயணத்தின் போது பெண் ஒருவர் செய்த வீரதீர செயல் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் யோகிதா சட்டாவ். 40 வயதான இவர் தனது பெண் நண்பர்கள், குழந்தைகளுடன் சிறுர் என்ற பகுதிக்கு பேருந்தில் சென்று இருக்கிறார். அங்கு உறவினர்களை சந்தித்துவிட்டு திரும்பி வரும் போதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அரசு பேருந்து ஒன்றில் இவர்கள் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது பஸ் ஓட்டுனருக்கு பாதி வழியில் வலிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அதோடு சேர்த்து அவருக்கு நெஞ்சு வலியும் ஏற்பட்டுள்ளது. பஸ்ஸை வேகமாக ஒட்டிக்கொண்டு இருந்த ஓட்டுனர் இதனால் அங்கேயே நிலைகுலைந்தார். பஸ்ஸை கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோ செய்தவர், அருகே இருந்த சாலை தடுப்பு ஒன்றில் மோதி பேருந்தை நிறுத்தினார். வலிப்பு மற்றும் நெஞ்சுவலி காரணமாக அங்கேயே பேருந்து ஓட்டுனர் மயங்கி இருக்கிறார்.

இதனால் அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டுள்ளது. பேருந்து மோதியதில் முன் சீட்டில் உட்கார்ந்து இருந்த சிலருக்கு காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. உள்ளே இருந்த குழந்தைகள் எல்லோரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் கண்ணீர் விட்டுள்ளனர். பெண்கள் பலரும் பதற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். அங்கு இருந்த ஆண்களுக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், தான் யோகிதா சட்டாவ் சட்டென சுதாரித்து டிரைவரை தூக்கி இன்னொரு இருக்கையில் அமர வைத்துவிட்டு, பேருந்தை ஓட்ட தொடங்கினார். டிரைவர் சீட்டில் அமர்ந்து பேருந்தை வேகமாக இயக்கிய யோகிதா சட்டாவ் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் பேருந்தை ஓட்டி சென்று இருக்கிறார். மருத்துவமனைக்கு வேகமாக ஓட்டி சென்ற யோகிதா சட்டாவ் அந்த டிரைவரின் உயிரை காப்பாற்றி உள்ளார்.

யோகிதா சட்டாவ் 10 கிமீ தூரத்திற்கு பேருந்தை பாதுகாப்பாக ஓட்டி சென்றதோடு உரிய நேரத்தில் அந்த டிரைவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இதற்கு முன் நான் பஸ் ஒட்டியது இல்லை. மெடிக்கல் எமர்ஜென்சி என்பதால் ஓட்டினேன். எனக்கு கார் ஓட்டி பழக்கம் இருக்கிறது. லைசன்ஸ் இருக்கிறது. அந்த பேருந்து டிரைவர் உயிரை காக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அந்த நேரத்தில் எனக்கு வேறு வழி தெரியவில்லை. இதனால் பேருந்தை வேகமாக ஓட்டிச்சென்றேன். அதே சமயம் பேருந்தில் இருந்த மற்ற பயணிகளின் பாதுகாப்பும் முக்கியம். அதனால் வேகமாக சென்றாலும் பேருந்தை முடிந்த அளவு பாதுகாப்பாக ஓட்டினேன். அவர் உயிரை காப்பாற்றியது சந்தோஷம் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பதற்றமான நேரத்தில் வேகமாக செயல்பட்டு பேருந்தை ஓட்டிச்சென்ற யோகிதா சட்டாவை பலரும் பாராட்டி வருகிறார்கள். அவர் பஸ் ஓட்டும் வீடியோ இணையம் முழுக்க தற்போது வைரலாகி வருகிறது.

திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்த அரசு பேருந்து ஓட்டுனர் - 10 கிலோமீட்டர் தூரம் பேருந்தை இயக்கி உயிரை காப்பாற்றிய வீரப் பெண்.
 

Tags :

Share via