இந்து மதத்திற்கு எதிராக உதயநிதி - கிருஷ்ணசாமி

by Staff / 06-09-2023 02:17:37pm
இந்து மதத்திற்கு எதிராக உதயநிதி - கிருஷ்ணசாமி

உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, “சனாதன தர்மத்தை ஒழிப்போம் என கூறிக்கொண்டு இந்து மதத்திற்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் போர் தொடுக்க முயற்சி செய்கிறார். மனித குலத்தை தாண்டி எல்லா உயிரினத்திற்கும் பொதுவானதாக சனாதன தர்மம் உள்ள குழலில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றது கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories