தமிழகத்தில் பீர் விற்பனை இருமடங்கு அதிகரிப்பு

by Staff / 28-04-2024 02:28:12pm
தமிழகத்தில் பீர் விற்பனை இருமடங்கு அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் கோடை வெயில் உச்சத்தை எட்டி மக்களை கதிகலங்க வைக்கிறது. இதனால் வெளியே செல்லும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அதேசமயம் பெரும்பாலான பொதுமக்கள் கொளுத்தும் வெயிலை சமாளிக்கவும், உடல் சூட்டை தணிக்கவும் மோர், இளநீர், பழச்சாறு போன்றவற்றை வாங்கி அருந்துகிறார்கள். ஆனால் வெயிலுக்கு இதமாக `பீர்' குடித்தால் நன்றாக இருக்கும் என்று மதுப்பிரியர்களின் மனநிலையும் மாறியுள்ளது.குறிப்பாக கோடை காலம் வந்தாலே பெரும்பாலான மதுப்பிரியர்களின் எண்ணம் பீர் மீது இருக்கும். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலுமே வெயிலின் தாக்கம் தீவிரமாக உள்ளதால், டாஸ்மாக் கடைகளில் பிராந்தி, ரம் மதுவகைகளை விட பீர் விற்பனை இருமடங்காக அதிகரித்துள்ளது. தற்போது வழக்கத்தைவிட பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கோடை காலம் முடியும் வரையிலும் பீர் விற்பனை அதிகரிக்கும் என்றனர்.

 

Tags :

Share via