நியூஸ் க்ளிக்கில் டெல்லி போலீசார் சோதனை

by Staff / 03-10-2023 11:26:58am
நியூஸ் க்ளிக்கில் டெல்லி போலீசார் சோதனை

'நியூஸ் க்ளிக்' என்ற செய்தி இணையதளத்துக்கு சீனாவுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்கள் மற்றும் அந்த அமைப்பின் ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். டெல்லி, நொய்டா, காஜியாபாத் ஆகிய இடங்களில் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு தீவிர சோதனை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் மீது டெல்லி காவல்துறை ஏற்கெனவே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo