புழல் சிறையில் ஆயுள் கைதி தற்கொலை

by Staff / 03-10-2023 11:32:14am
புழல் சிறையில் ஆயுள் கைதி தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் கஜா என்ற கஜேந்திரன் (63) இவர் 2007ஆம் ஆண்டு மறைமலைநகரில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் கஜேந்திரனுக்கு 20 ஆண்டு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. இதையடுத்து, 2009ஆம் ஆண்டு கஜேந்திரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சிறையில் உள்ள கழிவறை ஜன்னலில் துண்டால் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து மன உளைச்சலில் கஜேந்திரன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
 

 

Tags :

Share via

More stories