3 பள்ளி மாணவர்கள் கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிவலார்பட்டியில் முருகனின் மகன்களான மகேஸ்வரன் (11), 6ஆம் வகுப்பும், அருண்குமார் (09) 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். அதே பகுதியில் கார்த்திகேயனின் மகன் சுதன் (07) ஆகிய மூவரும் விடுமுறையில் ஒன்றாக விளையாடியுள்ளனர். இவர்கள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடிய போது சிறுவர்களின் சைக்கிள்கள் கண்மாய்க்கரையில் நின்றுள்ளது. அங்கு பார்த்தபோது அருண்குமாரின் உடல் நீரில் மிதந்துள்ளது. அதிர்ச்சிடைந்த கிராமத்தினர் கண்மாயில் இறங்கி தேடியபோது மகேஸ்வரன், சுதனின் சடலங்களையும் மீட்டனர். பின்னர் போலீசார் விரைந்து சிறுவர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
Tags :