உத்தர பிரதேச நிலவரம் குறித்து நீதிமன்றம் அதிருப்தி
உத்தர பிரதேசத்தில்,ராமர் கோயில் கட்டுமானத்தைப் பெருமிதமாக கூறும் அரசின் மருத்துவ கட்டமைப்பே ராமரை நம்பி தான் உள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், 2,63,533 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,52,28,996 ஆக உயர்ந்துள்ளது. த் தொற்றால் 2,78,719 பேர் மரணமடைந்திருப்பதாகவும், 4329 பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 2,15,96,512 பேர் மீண்டு வந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட சந்தோஷ் பாபு எனும் நபர், மருத்துவமனையின் கழிப்பறையில் மயங்கி விழுந்து மரணமடைந்ததாகவும், அவருடைய உடல் மருத்துவமனை நிர்வாகத்தால், அடையாளம் தெரியாதவரின் உடல் போல வெளியனுப்பபட்டுள்ளது என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மீரட் போன்ற மாநகரங்களில் இருக்கும் மருத்துவ கல்லூரியின் கட்டமைப்பே, இவ்வாறு இருக்கிறது என்றால், சிறு சிறு கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் இந்த மாநிலத்தில் மொத்த மருத்துவ கட்டமைப்புக்கும் ராமர் தான் கருணைக் காட்ட வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரிசோதனைகள் மிக குறைந்த அளவிலே நடைபெறகிறது என்றும் தடுப்பூசிகளை மாநில அரசே உற்பத்தி செய்யாமல் இருப்பது ஏன்? என்றும் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பு இவ்வளவு மோசமாக இருக்கும் சூழலில் கொரோனா மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்புள்ளது என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags :