பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

by Staff / 01-06-2023 04:24:52pm
பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

கர்நாடகாவில் பயிற்சியின் போது விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. பயிற்சி விமானத்தில் இருந்த பெண் பைலட் உட்பட இரு விமானிகளும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய தகவலின்படி, விமானி பயிற்சி விமானத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது, ​​தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனமான ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. போர் விமானங்கள் இது போன்று பயிற்சிக்கிடையே விபத்துக்குள்ளாவது சமீக காலமாக அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via