இன்று முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, இன்று முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பாதையால், இன்று தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலான பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.
Tags :


















