6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

by Staff / 22-04-2024 04:19:08pm
6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியருக்கு  இரட்டை ஆயுள் தண்டனை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பெரிய நரிக்கோட்டை என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக கடந்த 2015ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். அப்போது அந்த பள்ளியில் படித்த 4வது 5வது படித்த சிறுமிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.இதுகுறித்த வழக்கு சிவகங்கை போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கின் மீதான விசாரணையில், 6 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நிரூபிக்கப்பட்டது என கூறி தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories