காபூலில் மீண்டும் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு: ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலி
காபூலில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட மூவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த 26 ஆம் தேதி காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 170 பேர் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் மீண்டும் அதேபோன்ற தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் காவாஜா புக்ரா என்ற பகுதியில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால், அப்பகுதியில் இருந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்ததுடன் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. ராக்கெட் குண்டுகளை வீசி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட மூவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தவர கூடிய நாட்களிலும் ISIS உள்ளிட்ட அமைப்புகள் காபூல், ஆப்கான் உள்ளிட்ட நகரங்களில் திடீர் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க மற்றும் லண்டனை சேர்ந்த உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளது.
Tags :