அண்ணா இல்லத்தில் முதல்வர்
காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார்.
அதனைத் தொடர்ந்து அண்ணாவின் உருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்முதல்வரான பிறகு முதல் முறையாக அண்ணா நினைவு இல்லத்திற்கு வருகை புரிந்த மு.க.ஸ்டாலினுக்கு, கிருமிநாசினி தெளித்து மற்றும் வெப்பநிலைப் பரிசோதனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, கூடங்களில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை ஸ்டாலின் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் இணைந்து தொழில்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கார் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட உள்ளார். மாலையில் மின்னணு வாகன உற்பத்தி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
Tags :