கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிய மருத்துவர் கைது

by Editor / 16-07-2025 05:28:59pm
கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிய மருத்துவர் கைது

சேலத்தில் அண்ணா பூங்காவை ஒட்டி நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையின் மீது மர்ம நபர்கள் கருப்பு நிற பெயிண்ட்டை வீசினார்கள். இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் விஸ்வநாத் என்ற மருத்துவரை கைது செய்துள்ளார். சிலை மீது கருப்பு பெயிண்ட் வீசியதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். கருணாநிதிக்கு இவ்வளவு பெரிய சிலை தேவையா என நினைத்து ஊற்றியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

 

Tags :

Share via