கள் சிறந்த பானம் என சீமான் தவறான பிரச்சாரம் செய்கிறார்..தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, "தமிழக அரசே டாஸ்மாக் கடைகளை நடத்துவதால் கிராமங்களில் இளைஞர்கள் பெரியவர்கள் என 60% பேர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சூழலில் சீமான், கள் உணவு, சிறந்த பானம் என மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். சட்டத்திற்கு புறம்பாக சீமான், கள் இறக்கியுள்ளார். அரசியல் காரணத்திற்காக கள் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்" என்றார்.
Tags :