சொத்து தகராறு.. மூவர் உயிருடன் எரிப்பு
கேரளா மாநிலம், திருச்சூரில் உள்ள சிராக்கேகோடு பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் சொத்துத் தகராறில் தனது மகன், மருமகள், பேரனை பெட்ரோலை ஊற்றி தீவைத்து உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றுவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தகராறு காரணமாக தந்தையே மகன், மருமகள், பேரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :