நீதிபதிகளை அவதூறாக பேசிய பிரமுகரை கைது செய்ய காவல்துறை தீவீரம்

by Editor / 19-03-2022 09:22:09am
 நீதிபதிகளை அவதூறாக பேசிய  பிரமுகரை கைது செய்ய காவல்துறை தீவீரம்

கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கர்நாடக அரசின் உத்தரவு செல்லும் என்று கூறி தீர்ப்பு வழங்கியது. மேலும், ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அத்தியாவசியமாக பின்பற்றப்படும் வழக்கம் இல்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

  இந்த நிலையில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர் அதில் ஒரு பகுதியாக  கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மதுரையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நீதிபதிகளை  விமர்சனம்  செய்து பேசிய கோவை ரஹ்மத்துல்லா என்பவர் மீது புகார்கள் சென்ற நிலையில் அவர் மீது வழக்க பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது,இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்ய  நேற்று  கடையநல்லூரில் நடைபெற இருந்த   கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்துகொள்ள இருந்த நிலையில்  மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்திராவின் பேரில் மற்றும் ஏடிஎஸ்பி ராஜேந்திரன் டிஎஸ்பிக்கள் கணேஷ், பொண்ணரசு  ,  இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், ராஜாராம் ,வேல்கனிஉள்ளிட்ட காவல்துறை குழுவினர்  தயார் நிலையில் இருந்தபொது கோவை ரஹ்மத்துல்லா அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் இடம் பெயர்ந்தார்.இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்ய மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களிலும்,தமிழக கேரளா எல்லை புளியரை காவல்துறை சோதனைச்சாவடியில் தென்காசி காவல் துறை கண்காணிப்பாளர் மணிமாறன்  தலைமையில் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் அடங்கிய காவல்துறையினர் விடிய..விடிய வாகனச்சோதனை நடத்தினர்.

 

Tags : Police are on high alert to arrest a person who slandered judges

Share via