தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்து வரும் நிலையில், மழைக்கு வாய்ப்பு வானிலை மையம்.

தமிழ்நாட்டில் வரும் 25-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஞாயிறு, திங்கள் ஆகிய 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
வரும் 25-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Tags : தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்து வரும் நிலையில், மழைக்கு வாய்ப்பு வானிலை மையம்.