டிஜிட்டல் திருட்டுகள்-வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

by Admin / 20-02-2022 04:37:18pm
டிஜிட்டல் திருட்டுகள்-வியாபாரிகளுக்கு எச்சரிக்கை


திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ நகரில் துரைசாமி என்பவர் பாஸ்ட்புட் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இவரது ஹோட்டலில் சாப்பிட்ட ஒருவர் கூகுள்பே வழி பணம் செலுத்த எண்ணி க்யூஆர் கோடை ஸ்கேன்
செய்து பணம் அனுப்பியுள்ளார்.பணம் ஹோட்டல்உரிமையாளர் கணக்கில் சேரவில்லை.அதனால்,மீண்டும்
ஒரு முறை ஸ்கேன் செய்து பணம் அனுப்ப முயன்ற பொழுது அந்த க்யூஆர் கோடில்உரிமையாளர்பெயர்
வராமல்,வேறு ஒருவர் பெயர் வர,அதை ஹோட்டல் உரிமையாளரிடம் காட்டிய பொழுது ,அதிர்ந்து போனார்.
உடன் தம் கடையிலுள்ள க்யூஆர் கோடை பரிசோதித்த பொழுது,அதன் மீது இன்னொரு க்யூஆர் கோடு
ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது தெரியவந்ததை அடுத்து ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.காவல்துறையினர் சி.சி.டி.வி அடிப்படையில் மோசடி பேர் வழியை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories