ஜாதி சான்றிதழ் கேட்டு கொட்டும் மழையில் தொடர் போராட்டம்

by Staff / 26-12-2022 04:36:59pm
ஜாதி சான்றிதழ் கேட்டு கொட்டும் மழையில் தொடர் போராட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மலைக்குறவர் இன மக்கள் பழங்குடியினர் எஸ் டி சாதி சான்றிதழ் வழங்க கோரி ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் முன்னாள் எம்எல்ஏ டில்லி பாபு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பள்ளி குழந்தைகள் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில் மலைக்குறவர் இன மக்களுக்கு உடனடியாக பழங்குடியினர் எஸ் டி இனச் சான்று வழங்க கோரி முழக்கமிட்டும் பதாகைகள் ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. திடீரென மழை பெய்ததால் மழையை பொருட்படுத்தாமல் பள்ளி குழந்தைகள் பெண்கள் என அனைவரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via

More stories