“மாணவியின் மரணத்திற்கு திமுக முழு பொறுப்பேற்க வேண்டும்” - இபிஎஸ்

by Editor / 03-03-2025 02:24:10pm
“மாணவியின் மரணத்திற்கு திமுக முழு பொறுப்பேற்க வேண்டும்” - இபிஎஸ்

நீட் தேர்வில் உயிரிழந்த மாணவியின் இறப்புக்கு திமுக பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி உயிரிழந்தார். அவரது இறப்புக்கு திமுக அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். அந்த நீட் ரகசியத்தை உடனடியாக திமுக சொல்ல வேண்டும். இனியாவது எந்த நீட் மரணம் நிகழாவண்ணம் தடுக்க வேண்டும்” என்றார்.

 

Tags :

Share via