. என்ன மாதிரி தனியாக கட்சி ஆரம்பிச்சு ஒரு சதவீத ஓட்ட வாங்க முடியுமான்னு பாருங்க.. விஜய் .

by Admin / 13-02-2026 04:51:20pm
. என்ன மாதிரி தனியாக கட்சி ஆரம்பிச்சு ஒரு சதவீத ஓட்ட வாங்க முடியுமான்னு பாருங்க.. விஜய் .

இன்று சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் விஜய் பேசிய சில செய்திகள்

.இந்த விஜய் உங்ககிட்ட ஓட்டு கேட்டு மட்டும் வரல உங்களுக்காக நீதி கிடைக்க அரசியலுக்கு வந்த நான் இப்போ உங்களிடம் நீதி கேட்க வந்திருக்கிறேன் என்றும் இந்த விஜய் என்னங்க தப்பு செஞ்சா உங்களுக்கு நல்லது செய்வதற்காக அரசியலுக்கு வந்தான் எல்லாத்தையும் ஒதுக்கி தள்ளிட்டு மக்களுக்காக வந்தேன்  . அதைத் தவிர நான் வேற என்ன செஞ்சேன் எல்லாருக்கும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மாநாடு நடத்துவதற்கு பர்மிஷன் கொடுக்கிறாங்க எனக்கு நான் மக்களை சந்திப்பதற்கோ இல்லை என்னை மக்கள் சந்திப்பதற்கோ ஒரு இடத்தை கொடுக்க மாட்டேங்கிறாங்க கொடுக்கவும் விடமாட்டேங்குறாங்க... எஸ் ஓ பி அப்படின்னா என்ன பொறுத்த வரைக்கும் ஸ்டாலின் ஆபரேஷன் சிஸ்டம் யாரெல்லாம் எனக்கு எதிரா என்னென்ன வேலை செய்றாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் என்றும் காசு கொடுத்து ஓட்டு வாங்கலாம்னு நினைக்கிறாங்க அது இந்த விஜய் வந்த பின்னால நடக்காது வண்டி வண்டியா கொண்டு வந்து கொட்றாங்க காசு கொடுப்பாங்க அதை வாங்கிட்டு அது உங்க பணம் அவங்க காசு கொடுத்த காசை வாங்கிட்டு அவங்க காதுல விசில் விடுங்க செவில அடிக்கிற மாதிரி ஊருங்க ஓட்ட விசிலுக்கு போடுங்க என்று சொல்லி உறுதிமொழி எடுக்குற மாதிரி கையை நீட்டி வைக்க சொல்லி எங்க ஓட்டு எங்க உரிமை எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு யாரையும் நம்பி ஏமாற மாட்டோம் என்று அவர்களையும் திருப்பி சொல்ல வைத்து.... கேட்டாச்சு ,சார், நீங்க கொள்ளை அடிச்சு வச்சிருக்க பணத்தை குப்பையில தான் கொட்டணும். உங்க ஆட்சியும் குப்பையில தான் தூக்கி போடணும்என்றும் வீட்ல இருக்கிற அத்தனை பேரிடமும் விசில் சின்னத்தில் ஓட்டு போட சொல்லுங்க.. பணத்தை கொடுத்து ஏமாற்றக்கூடிய கூட்டத்தை ஒழிக்கணும்... சட்டம் ஒழுங்கு பாதுகாக்க முழு நேர டிஜேபி இல்ல பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை.. டி.என்.பி.எஸ்.சி தேர்வு கூட ஒழுங்கா நடத்த தெரியல... என்ன மாதிரி தனியாக கட்சி ஆரம்பிச்சு ஒரு சதவீத ஓட்ட வாங்க முடியுமான்னு பாருங்க... எனக்கு யாரு மேலயும் பகல் கிடையாது நான் அதற்காக கட்சி ஆரம்பிக்கல. இந்த வெறுப்பு அரசியலை எனக்கு பண்ண தெரியாது. எனக்கு தேவையும் இல்லை என்றும் நமக்கு 30 சதவீதமான வாக்குகள் கிடைக்கும்னு சொல்றாங்க.... நாளைக்கு உங்களுடைய ஆட்சி நடக்க போகுது என்று சொல்லி முடித்தார்..

 

-

 

Tags :

Share via