இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சேலத்தில் தேர்தல் பரப்புரை

by Admin / 13-02-2026 10:49:17am
 இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சேலத்தில் தேர்தல் பரப்புரை

இன்று மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை சேலம் சீலநாயக்கன்பட்டி கேவிபி கார்டன் உள்வளாகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்போடு தேர்தல் பரப்புரை நிகழ்வும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் நாலாயிரத்து தொள்ளாயிரத்தி தொன்னுத்தி எட்டு பேர் மட்டுமே கலந்து கொள்வதற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. கியூ ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டுடன் அழைக்கப்பட்டுள்ளவர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட உள்ளார். அதனால் அனுமதிக்கப்படாத வேறு யாரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் நிகழ்ச்சியை காண விரும்புபவர்கள் தொலைக்காட்சியின் நேரலையில் கண்டு களித்துக் கொள்ளலாம் என்று தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த் கேட்டுக்கொண்டு உள்ளார்.

 

Tags :

Share via