உக்ரைன் போர் தொடங்கிய பின் ரஷ்ய அதிபர் புதினின் முதல் வெளிநாட்டு பயணம்

by Editor / 27-06-2022 12:25:36pm
உக்ரைன் போர் தொடங்கிய பின் ரஷ்ய அதிபர் புதினின் முதல் வெளிநாட்டு பயணம்

உக்ரைன் போர் தொடங்கிய பின் முதல் முறையாக அதிபர் புதின் ரஷ்யாவை விட்டு வெளியேறி மத்திய ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஊடகம் வெளியிட்டுள்ள பதிவில் அதிபர் புதின் தாஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் நாடுகளுக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துர்க்மெனிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது அஜர்பைஜான் கசகஸ்தான் ஈரான் உள்ளிட்ட நாடுகளின் காஸ்பியன் மாநாட்டில் அதிபர் புதின் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் மாஸ்கோ வரும் இந்தோனேசிய அதிபர் புதின் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories