தாய் கண் முன்னே 3 மகன்கள் பலி
புதுச்சேரி காட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(46). டெய்லர். இவரது மனைவி சசி(40). ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மூத்தமகன் புஷ்பராஜ்(17). கல்லூரியில் படித்து வந்தார். இளையமகன் கிஷோர்ராஜன்(16). 11ஆம் வகுப்பு படித்து வந்தார். சுந்தர்ராஜ் அண்ணன் ராஜா(50). இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களின் மகன் ஷோபன்ராஜ்(19). பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கடற்கரைக்கு சென்றனர். அனைவரும் கடலில் குளித்துள்ளனர். திடீரென ராட்சத அலையில் புஷ்பராஜ், கிஷோர்ராஜன், ஷோபன்ராஜ் ஆகியோர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், தாய் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Tags :