கேரள பேரவை: தமிழில் பதவியேற்ற  தேவிகுளம் எம்எல்ஏ

by Editor / 24-05-2021 04:44:05pm
 கேரள பேரவை:  தமிழில் பதவியேற்ற   தேவிகுளம் எம்எல்ஏ

 

 

கேரள சட்டப்பேரவையில் தேவிகுளம் உறுப்பினர் ராஜா தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.நேற்று  கூடிய கேரள சட்டப்பேரவையில், புதிதாக வெற்றி பெற்ற அனைத்து தொகுதிகளின் உறுப்பினர்களுக்கும் தற்காலிக பேரவைத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், கேரள மாநிலத்தின் தேவிகுளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜா, தமிழில் பதவியேற்றுக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்கும் ராஜா, தனது இளங்கலைப் பட்டப் படிப்பை கோவை அரசு சட்டக் கல்லூரியில் பயின்றது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo