விமானநிலையத்தில் வெள்ளப்பெருக்கு.

by Editor / 04-12-2023 09:06:03am
விமானநிலையத்தில் வெள்ளப்பெருக்கு.

'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே போல், திருவள்ளூர் மாவட்டத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இதுவரை 14 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. கனமழை காரணமாக 15 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தற்பொழுது கொட்டி தீர்க்கும் கனமழையால் நீர் சூழ்ந்து காணப்படுவதால் விமானங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

 

Tags : விமானநிலையத்தில் வெள்ளப்பெருக்கு.

Share via
Logo