சின்ன ..சின்ன செய்திகள்..

by Editor / 21-11-2021 02:46:40pm
சின்ன ..சின்ன செய்திகள்..

வேளாண் சட்டத்தை போல் நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்: தயாநிதி மாறன் 
வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்தது போல், நீட் தேர்வையும் ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பி தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். இதே போல் தமிழகத்தில் ஒருமித்த குரலாக நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்கிறோம் அதையும் செய்தால் மனதார பாராட்டுவோம் எனவும் கூறினார்.

சுத்தமல்லி நீர்தேக்கத்தில் இருந்து உபரிநீர் 1500 கன அடி வீதம் வெளியேற்றம்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், சுத்தமல்லி நீர்தேக்கத்தில் இன்று (21,11.2011) நீர் இருப்பு மொத்த கொள்ளவு - 4.75 மீட்டரை எட்டியுள்ளது. நீர் வரத்து 1200 கன அடியாக உள்ளது. அனணயிலிருந்து உபரிநீர் 1500 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது. சித்தமல்லி நீர் தேக்கத்தை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு சென்னை வருகை.
தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் 3 நாட்கள் ஆய்வு செய்ய திட்டம்
உள்துறை இணை செயலாளா் ராஜீவ் சா்மா தலைமையிலான குழுவினர் தமிழகம் வந்தடைந்தனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரியில் மத்தியக்குழு நாளை ஆய்வு
நாகை, திருவாருர், தஞ்சை, மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், வேலூர், ராணிப்பேட்டையில் நாளை மறு நாள் ஆய்வு.

 

Tags :

Share via