சில வரிகளில் சின்ன சின்ன செய்திகள் ....

by Editor / 21-11-2021 02:31:44pm
சில வரிகளில் சின்ன சின்ன செய்திகள் ....

 

தனிப்பட்ட நபரையோ, சமூகத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதும் இல்லை. புண்பட்டவர்களுக்கு உளப்பூர்வ வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.  ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் அறிக்கை

உலக மீன்வள நாளான இன்று, மீனவர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வரும் சட்டங்களை எதிர்த்து போர்க்கொடி தூக்கி, மீன்வளத்தையும், மீனவர் நலத்தையும், பாதுகாப்போம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம்.நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி.


திருவில்லிபுத்தூர் டவுண் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட A.M.முத்துசாமிநாடார் திருமண மண்டபம் புதுப்பொலிவுடன் திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் ,சிவகாசி சட்ட மன்ற உறுப்பினர் A.M.S.G.அசோகன், பயோனியர் குரூப் S.மகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு  திருமண மண்டபத்தை திறந்து வைத்தனர். 


பெண்ணாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால்,ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே கேவூரு அருகே சாலைகள் (NH16) சேதம் போக்குவரத்து பாதிப்பு சாலைகள் சீர்செய்யும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.


சென்னையில் கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி கைது
சென்னையில் திமுக நிர்வாகி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான லெனின் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா நகர் காவல் நிலையம் அருகே கடந்த ஆகஸ்ட்டில் திமுக வட்ட அவைத்தலைவர் சம்பத்குமார் வெட்டிக் கொல்லப்பட்டார். கொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட நிலையில் முக்கிய குற்றவாளியான ரவுடி லெனின் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு
இனிவரும் காலங்களில் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நிதிச்சுமை இருந்தாலும் சென்னையை ஒளிரச்செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் எனவும் கூறினார்.

தமிழ்நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் 16,883 பேர் தற்கொலை.
குடும்ப பிரச்சனை, உடல்நலன் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் 16,883 பேர் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மொத்தம் 1,53,052 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்; இது 2019-ம் ஆண்டை விட அதிகம் எனவும் கூறப்படுகிறது.


 

 

Tags :

Share via