.கடல் வழியாக 100 கிலோ தங்கம் கடத்தல்

தமிழகத்துக்கு கடல் வழியாக 100 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை பாரிமுனை, சவுகார்பேட்டை பகுதிகளில் கடத்தல் தங்கம் விற்பதாக விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. கடந்த 13ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் அருகே 11.794 கிலோ தங்கம் பிடிபட்டது. தங்கம் உருக்கும் கடையில் இருந்து 3.3 கிலோ தங்கமும் திருச்சியில் இருந்து சென்னை வந்த காரில் 7.55 கிலோ தங்கமும் சிக்கியது.இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
.
Tags :