அம்மை நோய் குறித்து மக்கள் பதட்டப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தொழில்நுட்பவியல் த்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதால் கன்னியாகுமரி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. நிலப்பரப்பு அதிகம் உள்ள மருத்துவமனை இங்கு அடிப்படை தேவைகள் அதிகம் உள்ளன.
இங்கு பிரேத பரிசோதனை கூடம் அமைக்கவும் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி செய்யவும் ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வந்த நிலையில் பல்வேறு நாடுகளில் தற்போது குரங்கம்மை நோய் காண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், “இது குறித்தான அச்சம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது தொற்று நோய் இல்லை என WHO தெரிவித்துள்ளது. ஆகவே, குரங்கு அம்மை குறித்து மக்கள் பதட்டப்பட வேண்டாம்” என்று தெரிவித்தார்.
குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையங்களில் கண்காணிக்கபடுகின்றனர். அறிகுறிகள் தென்பட்டால் அவர்களது இரத்த மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்தார்.
Tags :