அதிகமாக நூடுல்ஸ் சாப்பிட்ட இளைஞர் பலி

by Editor / 04-07-2025 01:16:58pm
அதிகமாக நூடுல்ஸ் சாப்பிட்ட இளைஞர் பலி

விழுப்புரத்தில் அளவுக்கு அதிகமாக நூடுல்ஸ் சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் (24) என்ற இளைஞர் கடந்த 3 நாட்களாக கடுமையான வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டுள்ளார். இரவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அளவுக்கு அதிகமாக நூடுல்ஸ் சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் அவர் உயிரிழந்தது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via