ஆகஸ்ட் 3வது வாரத்தில் விஜய் சுற்றுப்பயணம்

ஆகஸ்ட் 3வது வாரத்தில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் கட்சியின் 2வது மாநில மாநாட்டை திருச்சி அல்லது மதுரையில் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுப்பயணத்திற்கு முன் மாநாட்டை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மக்களை நேரடியாக சந்திக்க தவெக முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல் 2வது மாநில மாநாட்டை நடத்தி, விஜய் தங்களது கூட்டணி நிலைபாட்டை அறிவிப்பார் என தெரிகிறது.
Tags :