சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா திறப்பு

by Editor / 10-01-2022 09:25:38pm
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா திறப்பு

சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள  குரும்பப்பட்டி வன  உயிரியல் பூங்கா,  பார்வையாளர்களுக்காக  நாளை (11-ம் தேதி) திறக்கப்படுகிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் பூங்கா மூடப்படுவதால் விடுமுறை தினமான செவ்வாய்க்கிழமை யில் பூங்கா திறக்க ஏற்பாடு.செய்யப்பட்டுள்ளதாகவும் சேலம் வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பூங்காக்கள் திறக்கப்பட உள்ளதால் ஏற்காடு வருகைதந்துள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  ஆங்கங்கே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பூங்காக்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டி அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.பூங்காக்கள் திறக்கப்படஉள்ளதாலும் ஏற்காடு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

கொரோனா தடுப்பூசி 2 தவணை போட்டவர்கள் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏற்காட்டுக்கு அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் ஏற்காடு பகுதிகளில் வசிப்பவர்கள் உரிய அடையாள அட்டையுடன் வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்காடு செல்லும் சாலைகளில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 

 

Tags :

Share via