தூத்துக்குடியில் 10 கோடி ரூபாய் செம்மரக்கட்டைகள் பறிமுதல்.தொழிலதிபர்கள் உட்பட 3பேர் மீது வழக்கு.
தூத்துக்குடியில் ரூ.10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொழிலதிபர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, புதூர் பாண்டியா புரத்தில் உள்ள ஒரு லாரி செட் குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தூத்துக்குடி ரூரல் ஏஎஸ்பி சந்திஸ் தலைமையிலான போலீசார் அந்த குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு டாரஸ் லாரியில் தார்பாய் போட்டு மூடப்பட்ட நிலையில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 20 டன் செம்மர கட்டைகளை போலீசார் லாரியுடன் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் 10 கோடி ஆகும்.
லாரி செட் உரிமையாளர் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் ராகேஷ் (45), லாரி உரிமையாளர் கணேசன் மகன் ராஜேஷ், மற்றும் அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். செம்மரக்கட்டைகள் பிடிபட்டது குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags :