கோவில்களுக்கு அருகே மாட்டிறைச்சி விற்க தடை!

by Admin / 14-08-2021 11:40:08am
கோவில்களுக்கு அருகே மாட்டிறைச்சி விற்க தடை!

அசாம் சட்டசபையில் கால்நடை பாதுகாப்பு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து கோவில்களுக்கு அருகே 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மாட்டிறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 அசாம் மாநிலத்தில் முதல்வர், ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அசாம் சட்டசபையில் நேற்று கால்நடை பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பான்மை ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியுள்ளது. இதன் மூலம், அசாம் மாநிலத்தில் கோவில்களுக்கு அருகே 5 கி.மீ., சுற்றளவுக்கு மாட்டிறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் மாட்டிறைச்சி எல்லைகளை தாண்டி கொண்டு செல்வதும், கோவில்களுக்கு அருகே 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மாட்டிறைச்சி விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இதன் மூலம் மாட்டிறைச்சி சட்டவிரோதமாக விற்கப்படுவதும் கடத்தப்படுவதும் தடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

Tags :

Share via