தமிழகத்தில் முதல்முறையாக காந்திமதியானைக்கு ரூ.12ஆயிரம் செலவில் காலணிகள்

திருநெல்வேலி டவுண் பகுதியில் 2ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காந்திமதி என்ற யானை உள்ளது.13 வயதில் கோவிலுக்கு வந்த இந்த காந்திமதி யானைக்கு இப்போது 52 வயதாகிறது. இந்நிலையில், யானைக்கு வயது முதிர்வின் காரணமாக மூட்டு வலி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், காந்திமதிக்கு மருத்துவ குணம் வாய்ந்த செருப்புகளை, ரூபாய் 12 ஆயிரம் மதிப்பில் செய்த பக்தர்கள் அதனை யானைக்கு அணிவித்துள்ளனர். தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த யானைக்குத்தான் செருப்பு அணிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : For the first time in Tamil Nadu, Gandhimadiyanai shoes at a cost of Rs.12 thousand