கஞ்சா வைத்திருந்தவர் கைது - 100 கிராம் கஞ்சா பறிமுதல்.

by Editor / 10-09-2023 09:43:56pm
 கஞ்சா வைத்திருந்தவர் கைது - 100 கிராம் கஞ்சா பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்   உத்தரவின்படி விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் எட்டையபுரம் காவல் நிலைய ஆய்வாளர்  ஜின்னா பீர் முகமது தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று  (09.09.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரகிரி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில்   கோவில்பட்டி இனாம்மணியாச்சி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் பாஸ்கர் (27) மற்றும் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு இளஞ்சிறார் என்பதும், இவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.உடனே மேற்படி போலீசார் எதிரி பாஸ்கரை கைது செய்தும், மேற்படி இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி பாஸ்கர் மீது ஏற்கனவே எட்டையபுரம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை உட்பட 2 வழக்குகளும், தேனி மாவட்டம் தேவாரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :  கஞ்சா வைத்திருந்தவர் கைது

Share via

More stories