தமிழக சட்டப்பேரவை தலைவர்ஜே. .சி டி பிரபாகர் - ஆளுநர் ராஜேந்திர விசுவநாத் அர்லேகரை சந்தித்தனர்.
தமிழக சட்டப்பேரவை தலைவர் ஜே. .சி டி பிரபாகர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் ஆகியோர் ஆளுநர் ராஜேந்திர விசுவநாத் அர்லேகரை சந்தித்தனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து எம்.எ.ல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து வரும் பரபரப்பான சூழலில் ஆளுநர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத் தொடரில் மரபு வழி உரையை ஆற்றியதற்காக ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு பேரவை தலைவரும் அமைச்சரும் ஆளுநரை சந்தித்ததாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது தமிழக வெற்றி கழக தலைமை தங்களது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பணபலம் மற்றும் ஆசை வார்த்தைகளை காட்டி குதிரை பேரத்தில் ஈடுபட்டு தங்களது கட்சியில் இணைத்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே ஆளுங்களுடன் புகார் அளித்திருந்தார் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அதிமுக சார்பாக வலியுறுத்தப்பட்டது சமீபத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த கடிதங்களை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரிடம் முறைப்படி கொடுத்து கொடுத்தனர். ராஜநாமா கடிதங்களை பேரவை தலைவர் முறைப்படி ஏற்றுக் கொண்டார் இந்த குதிரை பேரகுற்றச்சாட்டுகளை தமிழக வெற்றிக்கழகம் மறுத்துள்ளது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி களைத்து தங்களை இணைத்து வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. பேரவை தலைவர் ஆளுநரை சந்தித்தது நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக கூறப்பட்டாலும் தமிழக அரசியலில் நிலவிவரும் எம்எல்ஏக்களின் ராஜ்னவாக்கள் மற்றும் குதிரை பேர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலே இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.
Tags :


















