இன்று கர்நாடகம் முழுவதும் 40 கர்நாடக அமைப்புகள் போராட்டம்

இன்று கர்நாடகம் முழுவதும் 40 கர்நாடக அமைப்புகள் பொதுபந்திற்கு அழைப்பு விடுத்துபோராட்டம்நடத்திவருகின்றனா். அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் தனியார் பேருந்துகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தமிழ்நாட்டிற்கு அக்டோபர் 15 வரை5,000 கன அடி வீதமாக தண்ணீரை விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து கன்னட அமைப்பினர். இன்று பொது பந்திற்கு அழைப்பு விடுத்தனர் பெங்களுர் முழுதும்.144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டிலும் நான்கு மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு பணியை தீவிர படுத்த தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜீவால் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். கர்நாடகம் சென்றிருந்த பேருந்துகள் நேற்று இரவு 10 மணிக்கு தமிழகம் திரும்பின. இன்று கர்நாடக மாநிலத்திற்குள் தமிழ்நாட்டில் இருந்து எந்த பேருந்துகளும் இயக்கப்படவில்லை. தொடர்ந்து கர்நாடக அமைப்பினர் காவிரி எங்களுடையது என்கிற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூர் போன்ற நகரங்களில் பெரும் பதட்டம் நிலவுவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகஅமைப்பினர் காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சி ஆளும் அரசையும் விமர்சித்து வருகின்றனர்.

Tags :