உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

by Editor / 04-09-2021 09:50:37am
உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

 உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மனுத் தாக்கல் செய்துள்ளது.

செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மேலும் 6 மாதம் அவகாசத்தை நீட்டிக்கக் கோரி புதிய இடைக்கால மனுவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

ஏற்கனவே இரண்டு முறை அவகாசம் கோரியிருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக கூடுதல் அவகாசம் கோரியுள்ளது மாநில தேர்தல் ஆணையம்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சமீபத்தில் தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டு இருந்தது

 

Tags :

Share via

More stories

Logo