தஞ்சையில் அரசு கல்லூரி மாணவிக்கு கொரோனா

by Editor / 04-09-2021 09:52:36am
தஞ்சையில் அரசு கல்லூரி மாணவிக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என மாணவியுடன் தொடர்பில் இருந்த 99 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் அரியலூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும், வரதராஜன் பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் தஞ்சை அரசு குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.948 மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories