பத்திரிகையாளர், எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு சாகித்ய அகாதமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது.

by 1tamilnews செய்திகள் / 04-09-2021 09:52:45am
பத்திரிகையாளர், எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு சாகித்ய அகாதமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது.

குழந்தைகள் நலனில் மிகுந்த அக்கறை  கொண்ட பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் , நமது மன்றத்தின் உறுப்பினர் யெஸ். பாலபாரதி எழுதிய மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலுக்கு சாகித்ய அகாதமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்துள்ளது.

 *குழந்தை இலக்கியத்திற்காக அளிக்கப்படும் இந்த சாகித்ய அகாதமி  விருது , நம்முடைய பத்திரிகையாளர் பாலபாரதிக்கு கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. 

மரப்பாச்சி சொன்ன ரகசியம்  புத்தகம் குழந்தைகள் சந்திக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து பேசும், எச்சரிக்கும் நூல்.  நாளிதழில் பணியாற்றும் பத்திரிகையாளர் பாலபாரதி ஏற்கனவே  வாசகசாலை மற்றும் விகடன் விருதுகளை  பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறப்பு குழந்தைகள் நலனுக்காக தொடர்ந்து சேவையாற்றி வரும் யெஸ்.பாலபராதியின் பணிகள் வெற்றிகரமாக தொடரட்டும்.

 

Tags :

Share via

More stories