அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, குழந்தைகள் பள்ளிக்குப் பசியுடன் வரக் கூடாது.”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காலை உணவுத் திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது
இத்திட்டம் அரசுக்கு செலவு இல்லை. எதிர்கால தலைமுறையை உருவாக்கும் முதலீடு; இத்திட்டத்தின் மூலம் 20.73 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள்.மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து; கல்வி என்ற சொத்தை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றாக வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு தடையாக உள்ள பசி, நீட் தேர்வு, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை உள்ளிட்டவைகளை தகர்ப்பது தான் எங்களுடைய முதல் வேலை.
காலை உணவு திட்டம் மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது.பள்ளிகளுக்கு வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோரை கேட்டுக் கொள்ள விரும்புவது எந்த பள்ளியிலும் வழங்கப்படும் உணவின் விகிதம், தரம் குறைய கூடாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Tags :